×

வேலூர் மாவட்டத்தில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும் நவீன கேமரா: விதிமீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விதிமீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும் நவீன கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதன்பின்னர் விதிமீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எஸ்பி ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார். சென்னை- பெங்களூரு இடையே வளரும் நகரமாக வேலூர் உள்ளது. வேலூரில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, உலகப்புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. இதனால் வேலூருக்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. மேலும் விபத்துக்களும் அதிகளவில் நடக்கிறது.  இந்த போக்குவரத்து நெரிசலுக்கு போதிய மேம்பாலங்கள், சாலைவசதிகள் இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், சிக்னலில் நிற்காமல் செல்வது, அதிவேகமாக செல்வது, 3 பேர் அமர்ந்து வாகனங்களில் செல்வது என்று விதிமீறும் வாகனங்களினாலும் நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே வேலூர் மாவட்டத்தில் விதிமீறும் வாகனங்களை கட்டுப்படுத்த, நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும் நவீன கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்களில் இந்த கேமரா பொருத்தப்பட உள்ளது. அதன்பின்னர், விதிமீறும் வாகன ஓட்டிகள் யாரும் தப்ப முடியாது. இதுகுறித்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் விதிமீறும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் இதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். விதிமீறும் வாகன ஓட்டிகளை கண்டறிய நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும் நவீன கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது’ என்றார்….

The post வேலூர் மாவட்டத்தில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும் நவீன கேமரா: விதிமீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...